பாப்பிரெட்டிபட்டி: கடத்தூரில் சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று கார்த்திகை மாத சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இந்த நிலையில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் அருகே உள்ள சந்தை பேட்டையில் மிகவும் பழமை வாய்ந்த பெருமாள் கோயிலில் உள்ள சிவன் கோயிலில் நேற்று(நவ.280 மாலை பிரதோஷ விழா நடைபெற்றது. 

இந்த விழாவை யொட்டி சாமிக்கு பன்னீர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்றது. பிரதோஷ விழாவில் கடத்தூர் பகுதி பக்தர்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி