முக்கல்நாயக்கன்பட்டி ஊராட்சி, கீழ்இராஜாத்தோப்பு பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மைய கட்டிடத்தை, பொது மக்கள் பயன்பாட்டிற்க்காக
பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி திறந்து வைத்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவ அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.