இருசக்கர வாகனம் மீது கார் மோதி விவசாயி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் மகேந்திர மங்கலத்தை அடுத்த ஒட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி மாதப்பன். இவர் ஜிட்டாண்டஅள்ளியில் இருந்து வெள்ளிசந்தை நோக்கி இன்று(அக்.3) காலை இருசக்கர வாகனத்தில் சென்றார். சீங்கேரி அருகே சென்ற போது பின்னால் இருந்து வந்த சொகுசு கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் மாதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த பாலக்கோடு துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மாதப்பன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி