பாப்பிரெட்டிப்பட்டி, மணியம்பாடியைச் சேர்ந்த தீபிகா, 2025-ல் நவீன்ராஜுவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, 40 பவுன் நகை, 10 லட்சம் ரூபாய் கார் கேட்டு கணவர், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கொடுமை செய்ததாக அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது, "நாங்கள் சொல்வது போல் புகாரை மாற்றி எழுதிக் கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்" என உதவி ஆய்வாளர் கூறியதாக தீபிகா குற்றம் சாட்டினார். இதனால் ஆத்திரமடைந்த தீபிகா, உறவினர்களுடன் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார்.