தர்மபுரி: இருசக்கர வாகன விபத்து; தொழிலாளி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கமலநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் இவர் கொத்தமல்லி காரன் கொட்டாய் கிராமத்தில் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பும் போது சாமிசெட்டிபட்டி- கமலநத்தம் சாலை அருகே இவர் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பழனிவேல் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். 

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மேலும் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை பழனிவேல் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தொப்பூர் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி