தர்மபுரி: பாசனத்திற்காக வாணியாறு அணையில் இருந்து நீர் திறப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஸ், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நீர்வளத்துறையின் சார்பில் வெள்ளிக்கிழமை வாணியாறு நீர்த்தேக்கத்திலிருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதி விவசாய நிலங்களின் பாசனத்திற்காக 55 நாட்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த தண்ணீர் திறப்பால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி