தர்மபுரி: பாசனத்திற்காக தொப்பையாறு அணையில் நீர் திறப்பு

தொப்பையாறு அணையிலிருந்து 5330 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளுக்கு நேற்று (பிப்ரவரி 5) முதல் 25.03.2026 வரை மொத்தம் 48 நாட்களுக்கு 260.061 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள 5330 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும். மாவட்ட ஆட்சியர் சதிஷ், தர்மபுரி எம்பி ஆ. மணி ஆகியோர் இணைந்து தொப்பையாறு அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறந்துவைத்தனர். இந்நிகழ்வில் நீர் வளத்துறை உயர் அலுவலர்கள், விவசாயிகள் கலந்துக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி