கோவில் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர்கள் குழுவுக்கு இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு பதவி பிரமாணம் செய்து வைத்தார். கோவில் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், கோவில் செயல் அலுவலர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து அறங்காவலர்கள் குழுவினர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கோவில் அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்றுள்ள பி. சி. ஆர். மனோகரன் மற்றும் அறங்காவலர்களுக்கு மேற்கு மாவட்ட திமுக செயலாளர்,
முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், வக்கீல் ஆ. மணி எம்.பி., கட்சி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக ஸ்ரீ வெங்கட்ரமண சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது பின்பு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.