தர்மபுரி: கனமழையால் சாலையில் முறிந்து விழுந்த மரம்

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட மோளையானூர் அருகே நேற்று (ஜூன் 2) மாலை பெய்த மழையால் சாலை ஓரம் இருந்த புளியமரம் இன்று புதன்கிழமை விடியற்காலை சாய்ந்தது. இதனால் பொம்மிடி - பாப்பிரெட்டிப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மரம் அப்புறப்படுத்தும் பணியில் தாமதம் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி