தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பட்டகபட்டி மாரியம்மன் மற்றும் மகா கணபதி திருக்கோவிலின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது. காலை தாரை தப்பட்டை மேள தாளங்கள் முழங்க வானவேடிக்கையுடன் பூங்கரக ஊர்வலம் நடைபெற்றது. நண்பகல் 12:30 மணியளவில் அம்மனுக்கு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.