தர்மபுரியில் இருந்து ஒடசல்பட்டி கூட்ரோடு வழியாக கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி செல்லும் தனியார் பேருந்துகளில் காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உரிய நேரத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் ஒரே நேரத்தில் பலர் பயணிப்பதால், மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்யும் அவலம் நீடிக்கிறது. எனவே, கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.