பின்னர் அவர்கள் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டார்கள். மேலும் அவரது சடலத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தையும் காவலர்கள் கைப்பற்றினர். மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த தெருக்கூத்து கலைஞர் மணி, இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தாரா? அல்லது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தாரா? முன்விரோதம் காரணமாக யாராவது அவரை கொலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் தொப்பூர் காவலர்கள் வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்