தர்மபுரி: முனியப்ப சாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

தர்மபுரி குமாரசாமிபேட்டை மேம்பாலம் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி முனியப்பன் திருக்கோவிலில் இன்று காலை 7: 00 மணி முதல் 9 மணி வரை தர்மபுரி எம்ஜிஆர் நகர் நகரில் உள்ள ஏரிக்கரை சக்தி முனியப்பனுக்கு பென்னாகரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி முனியப்பன் திருக்கோவிலில் முனியப்பனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து முனியப்பனுக்கு பொங்கல் வைத்து முனியப்பனுக்கு ஆடு கோழி பலியிட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பூஜை செய்து முனியப்பனுக்கு சாமி அழைத்து அருள்வாக்கு கூறினார். இதனை தொடர்ந்து முனியப்பன் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்து பூஜை செய்து ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு. அன்னதான வழங்கப்பட்டது இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் ஸ்ரீ சக்தி முனியப்பன் சுவாமி விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி