தர்மபுரி: சவேரியார் தேவாலயத்தில் சிறப்பு சிலுவை பாதை வழிபாடு

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட கோவிலூர் கிராமத்தில் அமைந்துள்ளது சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் திருத்தலம். இங்கே தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலிகள் நடைபெறுவது வழக்கம். தற்போது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தவக்கால நோன்பு விரத காலத்தை அனுசரித்து வரும் சூழலில் மார்ச் 28 நேற்று வெள்ளிக்கிழமை நான்காவது வார சிறப்பு சிலுவைப்பாதை வழிபாட்டை அனுசரித்தனர்.

இதனை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலூர் உதவி பங்குத்தந்தை பெனடிக் தலைமையில் சிறப்பு சிலுவைப்பாதை வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நேற்று அன்பிய பொறுப்பாளர்கள் சிறப்பித்தனர். சுற்றுவட்டார பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி