தர்மபுரி: மகா காளி கோயிலில் சிறப்பு பூஜை

தருமபுரி மொடக்கேரி ஸ்ரீஅஷ்டவாராஹி மகா காளி திருக்கோயில் நேற்று ஆனி மாத மூன்றாவது வெள்ளிக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் அம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் தர்மபுரி சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இங்கு கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி