இன்று ஏப்ரல் 06 காலை கூடிய வாரச்சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான சோலைகொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான்கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் 230க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
இன்று சிறிய ஆட்டுக்குட்டியின் விலை 2000 ரூபாய்க்கு தொடங்கி பெரிய அளவிலான ஆடுகள் 22000 ரூபாய் வரை விற்பனையானது. தர்மபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் இன்று 30 லட்சத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.