இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, நேற்று பாப்பிரெட்டிப்பட்டி - தர்மபுரி சாலையில் 100க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பின்னர், சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து அரூர் கோட்டாட்சியர் சின்னுசாமி, பொம்மிடி வருவாய் ஆய்வாளர் விமல், பஞ்சாயத்து தலைவர் முருகன், பொம்மிடி உதவி ஆய்வாளர், விக்னேஷ் உள்ளிட்டோர் விரைந்து சென்று, பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது, மாலைக்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதன் பேரில், போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.