தர்மபுரி: சுதந்திரப் போராட்ட தியாகி மகன் சொத்து அபகரிப்பு

பாப்பிரெட்டிபட்டி தொகுதி சவுக்குதாேப்பு அருகே உள்ள மத்தன்கொட்டாய் பகுதியை சேர்ந்த சசிகுமார் இவரது தந்தை சோலை என்பவர் சுதந்திர போராட்ட தியாகியாவார். இந்த நிலையில் அவர் சுயமாக சம்பாதித்த நிலங்களை அவருக்கும் அவரது மகன் சசிகுமாருக்கும் தெரியாமல் போலி ஆவணங்கள் மூலம் உறவினர்கள் தங்கள் பெயருக்கு கிரயம் செய்துள்ளனர். இந்நிலையில் பச்சையப்பன் இறந்த நிலையில் அவரது மகன் சன்முகம் தங்கள் சொத்து பாகுபிரிவினை செய்யும் போழுது தியாகி சோலை சொத்துக்களையும் சேர்த்து முறைகேடாக கையகப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் 2000ம் ஆண்டு நடந்தது. 

ஆனால் இது தியாகி சோலைக்கும் இவரது மகன் சசிகுமாருக்கும் தெரியாமல் மறைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சசிகுமார் அசல் ஆவணங்களுடன் கடந்த 2022ம் ஆண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காரணம் திமுகவை சேர்ந்த ராஜா என்பவர் திரைமறைவில் தியாகியின் சொத்துக்களை அபகரிக்க பச்சையப்பனின் மகன்கள் சன்முகம், மதியழகன் ஆகியோருடன் சேர்ந்து போலி ஆவணங்களை தயாரித்து பத்திர பதிவு துறை அலுவலகத்தில் தியாகி சோலையே நேரடியாக பச்சையப்பனின் மகன்களுக்கு கிரயம் செய்து சொத்துக்களை விற்றதாக அவர்களை தனது தந்தை மற்றும் தன்னுடைய கையெழுத்துக்களை போட்டுள்ளதாக இன்று சசிகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி