இந்த ஏலத்திற்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, பெங்களூரு விட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் வந்து செல்வது வழக்கம். இதன் நிலையில் நேற்று விவசாயிகள் 601 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். பட்டுக்கூடுகள் ஒரு கிலோ அதிகபட்சமாக 797 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ 598 ரூபாய்க்கும், சராசரியாக ஒரு கிலோ 689 ரூபாய்க்கும் விற்பனையானது.
மேலும் நேற்று (பிப்ரவரி 22) ஒரே நாளில் 4,18,705 ரூபாய் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.