தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்திய அஞ்சல் துறையில் மென்பொருள் தரம் உயர்த்தப்பட உள்ளது. இதன் மூலம் க்யூஆர் கோடு மூலம் பணம் செலுத்தும் வசதி உட்பட பல்வேறு புதிய வசதிகள் அறிமுகம் செய்ய உள்ளதால் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை பரிவர்த்தனை இல்லாத நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தர்மபுரி அஞ்சலகம் கீழ் செயல்படும் அனைத்து துணை, கிளை அஞ்சலகங்களில் பணம் எடுப்பது பணம் செலுத்துவது மற்றும் ஆதார் சேவைகள் பதிவு தபால் விரிவுத்தபால் பார்சல் அனுப்புவது உள்ளிட்ட சேவைகள் மற்றும் எந்த வித பரிவர்த்தனையும் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.