இந்நிலையில், கடந்த மார்ச் 18ம் தேதி மாலை குமரேசனும், முத்துலட்சுமியும் வீட்டில் இருந்தபோது, அத்துமீறி நுழைந்த கும்பல் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும், அவர்களது செல்போனை பறித்து, வீட்டில் இருந்த தையல் மிஷினையும் உடைத்துள்ளனர்.
இதில் காயமடைந்த முத்துலட்சுமி, குமரேசன் ஆகியோர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அவர்கள் பொம்மிடி காவல் நிலையத்தில் இன்று அளித்த புகாரின் பேரில் பெருமாள், சிலம்பரசன், ஸ்ரீதர், தங்கதுரை ஆகிய 4 பேர் மீதும் காவலர்கள் வழக்கு பதிவு செய்தனர். இதேபோல், பெருமாள் கொடுத்த புகாரின்படி குமரேசன், முத்துலட்சுமி மீதும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.