தர்மபுரி: பள்ளி மாணவன் தற்கொலை காவலர்கள் விசாரணை

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் டி. பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவரது மகன் ரூபின்ராஜ் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தான். நேற்று, பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினான். தனது அறைக்கு சென்று வெகுநேரம் ஆனதால் தாயார் கதவை தட்டியுள்ளார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை திறக்குமாறு தட்டிய போது, நீண்ட நேரமாகியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர் உறவினர்களின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார். 

அங்கு ரூபின்ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. உடனடியாக அவனை மீட்டு, கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, ரூபின்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், மொரப்பூர் காவலர்கள் விரைந்து சென்று, மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து இன்று வழக்கு பதிந்து மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி