சோலைகொட்டாய் வெங்கடானூர் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில், பொது நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டலாம் என மைனாரிட்டி ஆசிரியை மாதம்மாள் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மெஜாரிட்டி வகுப்பைச் சேர்ந்த சேகர் என்ற ஆசிரியர், மாதம்மாளைத் தாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் வியாழக்கிழமை பள்ளியை முற்றுகையிட்டு, சேகர் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆசிரியர்களை மாற்றவும் வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.