தர்மபுரி: நமது வாக்கு நமது உரிமை விழிப்புணர்வு பேரணி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா பொறியியல் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை “நமது வாக்கு நமது உரிமை” என்ற தலைப்பில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், தேசிய சேவை திட்ட நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணி முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரிக்கு வந்தடைந்தது.

தொடர்புடைய செய்தி