மேலும் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் தங்களது குழந்தைகளுக்கு எடைக்கு எடை நாணயங்கள் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தேர்தல் முடிவு வெளியான பின் விஜய் எடுக்கப்போகும் முக்கிய முடிவுகள்