இந்நிகழ்வின் சிறப்பு அழைப்பாளராகத் தருமபுரி அரசு கலைக்கல்லூரி, கணினிப் பயன்பாட்டியல் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் ச. சிலம்பரசன் அவர்கள் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் கல்லூரியில் 2025-26 கல்வியாண்டு இடம்பெறும் நிகழ்வுகள், மற்றும் செயல்படுத்தப்பட இருக்கும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாணவ, மாணவியருக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்த இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் இந்த நிகழ்வில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து