தர்மபுரி: ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்எல்ஏ ஆய்வு

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ. கோவிந்தசாமி நேற்று (நவ. 18) செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். சிகிச்சை முறைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், மக்கள் பயன்பாட்டிற்காக நெபுலைசர் கருவிகளை மருத்துவத் துறை அதிகாரிகளிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் மருத்துவ பயனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி