தர்மபுரி: கிராமப்புற பெண்களிடம் பிரசாரத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ

திங்கட்கிழமை, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட முக்கல் நாயக்கன்பட்டி மற்றும் நூலஹள்ளி கிராமங்களுக்கு நேரில் சென்ற பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்எல்ஏ கோவிந்தசாமி, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்து கிராமப்புற பெண்களிடம் எடுத்துரைத்தார். திமுக ஆட்சியில் அதிமுகவின் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகவும், வீட்டு வரி மற்றும் மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி