தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி, பாத்திரக்கடை நடத்தி வருகிறார் இவரிடம் புதுரெட்டியூர் பகுதியை சேர்ந்த தனக்கு அவசரமாக 40 ஆயிரம் தேவை படுவதால், கடனாக கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் சாந்தி தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் சாந்தியிடம் பணம் ரேணுகாதேவி பணம் கேட்டு ரேணுகா தேவி தொந்தரவு செய்துள்ளார அவர் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரேணுகா தேவி அங்கிருந்த கட்டையால் சாந்தியின் தலையில் சர மாரியாக தாக்கி உள்ளார். அதில் மண்டை உடைந்து ரத்தம் வழிந்த நிலையில், சாந்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கடத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவ ருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து சாந்தி நேற்று ஜனவரி 01, மாலை அளித்த புகாரின்பேரில், ரேணுகா தேவியை கடத்தூர் காவலர்கள் கைது செய்து, நீதி மன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.