விநாயகருக்கு பால் அபிஷேகம் பக்தர்கள் செய்தனர். அதைத் தொடர்ந்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. வாஸ்து ஹோமம், முதல் யாகசாலை பூஜை, திரவிய ஆஹூதி, விக்ரகங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று (ஏப்ரல் 4) அதிகாலையில் 2ம் கால யாகசாலை பூஜையும், மற்றும் மூன்றாம் கால பூஜை நடைபெற்ற யாகசாலையிலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஸ்ரீ சக்திவிநாயகர், முருகன், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி விநாயகர் தரிசனம் செய்தனர். கோவிலின் கருவறையில் ஸ்ரீ சக்தி விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேவாரணையில் ஆரத்தி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மதிகோன்பாளையம் ஊர்க்காவலர், ஊர்தூரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.