தர்மபுரி: அரசு தேர்வில் வென்றவர்களை பாராட்டிய மு. அமைச்சர்

கலைஞர் நூற்றாண்டை யொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 'கலைஞர் நூலகம்' தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறக்கப்பட்டு வருகிறது. கலைஞர் நூலகத்தில் பள்ளிக் குழந்தைகள் முதல் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வரை பலருக்கும் பயனுள்ள வகையில் செயல்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் தருமபுரி மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி செட்டிக்கரை அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நூலகத்தில் படித்து அரசு பணிக்கு தேர்வு பெற்ற சி. நவீன் வங்கி ஊழியர் சி. முருகன்- வருவாய்துறை, ஆ. சத்தியபாமா - நீதித்துறை, எஸ். செல்வ கணபதி - கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர், இன்று திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் திமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி