சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து பெங்களூரு மாநிலம் கோலாப்பூர் நகருக்கு பேப்பர் லோடு ஏற்றிச் சென்ற லாரி, இன்று வெள்ளிக்கிழமை காலை தென்கரைக்கோட்டை திருவள்ளுவர் நகர் வளைவு பகுதியில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி டிரைவர் சுதாகர் (வயது 28) காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.