தர்மபுரி: கிரவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளான மணியம்பாடி, சிந்தல்பாடி, கடத்தூர், சில்லாரள்ளி, தாளநத்தம், உள்ளிட்ட பகுதிகளில் கனிம வளங்கள் கடத்தப்படுவதாக புகார் வந்ததன் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். 

இந்த நிலையில் நேற்று (ஜூன் 7) மாலை ஓடசல் பட்டி கூட்டுரோடு பகுதியில் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது தர்மபுரி பகுதியில் இருந்து சந்தேகப்படும் வகையில் வந்த டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் அனுமதியின்றி இரண்டு யூனிட் கிராவல் மண் (நொரம்பு மண்) கடத்தியது தெரியவந்தது. சோதனையின் போது ஓட்டுநர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். 

இது குறித்து அதிகாரிகள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் என்று அழைக்கப்படும் நொரம்பு மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும் கடத்தூர் காவலர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி