தர்மபுரியில் குளுகுளு நூலகம் திறப்பு

இன்று தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் பேரூராட்சியில் இன்று (12-06-2025) பாராளுமன்ற உறுப்பினர் நிதி மூலம் (இராஜ்யசபா) குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய நூலக கட்டட திறப்பு விழாவில் அதிமுக அமைப்புச் செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் முன்னாள் உயர்கல்வி மற்றும் வேளாண்மை துறை அமைச்சரும், பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன், அம்மாதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் உட்பட ஏராளமான அதிமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி