தர்மபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணி, தர்மபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டத்தில் ஏற்கனவே ரயில் போக்குவரத்து வசதி இல்லை, தலைநகரில் மேம்பால வசதி இல்லை, தற்போது பேருந்து வசதியும் இல்லையெனில் என்ன ஆவது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "மாவட்ட மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.