அரூர் பூந்தி மஹால் தெருவில் வசிக்கும் வெங்கடேஷ்-பூங்கொடி தம்பதியினருக்கு 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இன்று திங்கட்கிழமை காலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த கணவன் வெங்கடேஷ், மனைவி மகாவை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.