தர்மபுரி பிடமனேரியைச் சேர்ந்த கோகுல், தனது மனைவி அஞ்சுமாஸ்டெலஸ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அஞ்சுமாஸ்டெலஸ், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில், நகர காவல்துறையினர் கோகுலைக் கைது செய்தனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது.