தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதலே நிலவிய கடும் வெப்பத்திற்குப் பிறகு இந்த மழை மக்களுக்கு இதமளித்தது.