இந்த நிலையில் நேற்று காலை முதலே கடும் வெப்பம் நிலவிய சூழலில் மாலை 6 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேப்பம்பட்டி, மாம்பட்டி, தீர்த்தமலை மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடத்தூர், பொம்மிடி, மணியம்பாடி, பிள்ளைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென சூறைக்காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டியது.
பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின் நிறுத்தம் அமலில் தற்போது வரை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈட்டியம்பட்டி, வடசல்பட்டி, மொரப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 04 இன்று விடியற்காலை வரை சாரல் மழை பொழிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.