தர்மபுரி: வடசந்தையூரில் ரூ. 38 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி அடுத்த வடசந்தையூர் கிராமத்தில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் ஆடுகள் விற்பனைக்காக பிரசித்தி பெற்ற ஆட்டுச் சந்தை நடைபெறுகிறது. 

இங்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்ட வியாபாரிகளும் உள்ளூர் விவசாயிகளும் வந்து செல்வது வழக்கம். நேற்று ஏப்ரல் 03 நடைபெற்ற வாரச் சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 

ஆடுகள் இனம் மற்றும் அளவைப் பொறுத்து 3000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 18,000 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றது. நேற்று (ஏப்ரல் 3) 38 லட்சத்திற்கு ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி