நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த பழனியப்பன், தனக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மூக்கனூர், சீரம்பட்டி கிராமங்களுக்கு நேரில் சென்று உருக்கமாக பேசினார். தான் எளிமையாக பழகக் கூடியவன் என்றும், தொகுதிக்கு நல்லது செய்துள்ளதாகவும், தன்னை அணுகிய அனைவருக்கும் நல்லதை மட்டுமே செய்துள்ளதாகவும் அவர் கூறினார். வெள்ளிக்கிழமை அன்று அவர் இந்த சந்திப்புகளை மேற்கொண்டார்.