தர்மபுரி: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணியறு அணை 65.27 அடி உயரம் கொண்டது. பருவமழை காரணமாக அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திங்கட்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 63 அடியை எட்டியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் ஆற்றில் எப்போது வேண்டுமானாலும் திறக்கப்பட வாய்ப்புள்ளதால், ஆற்றங்கரைப் பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உதவி பொறியாளர் மோகனா வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி