தர்மபுரி: வாணியாறு அணையில் தீயணைப்புத் துறையினர் ஒத்திகை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதி பொம்மிடி அடுத்த வாணியாறு அணையில் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு & மீட்பு படையினர் மற்றும் வருவாய் துறை சார்பாக மழைக்காலங்களில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டால் எப்படி தற்காத்துக் கொள்வது குறித்து பயிற்சி மற்றும் செயல் விளக்கம் இன்று (ஜூன் 13) பிற்பகல் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில்குமார் மற்றும் தீயணைப்பு குழுவினர் பாப்பிரெட்டிப்பட்டி துணை வட்டாட்சியர் சிவஞானம் மற்றும் மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஒத்திகை மற்றும் பேரிடர் காலங்களில் தற்காத்துக் கொள்வது குறித்து ஒத்திகை மற்றும் செயல்முறை விளக்கம் அளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி