பாலக்கோட்டில் ஜெர்தலாவ் கால்வாய் முதல் புலிகரை ஏரி வரை 5,000 மீட்டர் நீர்கால்வாய் திட்டத்தின் கீழ் 12 ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது. 40 அடி ஆழமும், 50 அடி அகலமும் கொண்ட திறந்த வெளி கால்வாய் அமைப்பதால் மனிதர்கள் மற்றும் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பணியை நிறுத்தினர். அதிகாரிகள் தரப்புடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். குழாய் மூலம் கால்வாய் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.