தர்மபுரி: கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கன்னிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் விவசாயி இவர், இன்று வீட்டின் அருகே உள்ள கிணற்றின் மேல் பகுதியில் இருந்த செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அசோகன் கிணற்றுச் சுவருக்குள் தவறி விழுந்து விட்டார். 

இதுபற்றி தகவல் அறிந்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் கிணற்றுக்குள் குதித்து தண்ணீரில் மூழ்கிய அசோகனை மீட்டனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அசோகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருஷ்ணாபுரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி