தர்மபுரி: ராஜாப்பேட்டையில் திமுக பரப்புரை பொதுக்கூட்டம்

தர்மபுரி திமுக மேற்கு மாவட்டம் சார்பில் ராஜா பேட்டையில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தலைப்பில் பரப்பரை பொதுக்கூட்டம் நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பழனியப்பன் தலைமை வகித்த இக்கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் சக்திவேல் வரவேற்புரை ஆற்றினார். கொள்கை பரப்பு செயலாளர் எழிலரசன் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நடப்பு தேர்தலில் திமுக 200 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என அவர் தெரிவித்தார். இதில் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி