தி.மு.க. வைச் சேர்ந்த தங்கமணியை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். கோவிலுக்கும் வார்டுக்கும் சம்பந்தம் இல்லாத ஒரு நபர் எப்படி இந்த கோவிலில் அறங்காவலராக நியமிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். இதில், தி.மு.க. நகர செயலாளர் மற்றும் அ.தி.மு.க. வினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எங்கள் தரப்பில், 4 உறுப்பினர்கள் உள்ளோம். எங்களை நியமிக்க வேண்டும் இல்லையேல், முறையாக தேர்தல் நடத்துங்கள் என அதிமுக வினர் தெரிவித்தனர். இதனால், வேறுவழியின்றி, தி.மு.க. வினர் மற்றும் ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அங்கிருந்து கிளம்பினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்