தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, தர்மபுரி 25 மிமீ, அரூர் 16.4 மிமீ, பாப்பிரெட்டிப்பட்டி 14 மிமீ, பென்னாகரம் 12 மிமீ, ஒகேனக்கல் 12 மிமீ, நல்லம்பள்ளி 10 மிமீ, பாலக்கோடு 10 மிமீ, மற்றும் மோளையானுர் 27 மிமீ என மழை பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக அப்பகுதியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.