இத்திட்டத்தின்படி, அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் அதிகபட்சம் 25 கி. மீ ஆகும். அதில் சேவை செய்கிறார்கள். பாதையின் நீளம் மொத்த வழித்தட நீளத்தில் 65 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். வழித்தடத்தின் தொடக்க புள்ளி மற்றும் முனையப்புள்ளி சேவை செய்யப்படாத வழித்தடத்தில் உள்ள ஏதேனும் ஒரு குடியிருப்பாகவோ, கிராமமாகவோ இருக்க வேண்டும். அதில் ஒன்று பஸ் நிறுத்தமாகவோ அல்லது பஸ்நிலையமாகவோ இருக்கலாம். மாவட்டத்தில் மினி பஸ் இயக்குவதற்கான புதிய விரிவான திட்டத்தின் கீழ் இதுவரை 38 புதிய வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தர்மபுரி மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க காலக்கெடு நாளை மறுநாள் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. என அதில் கூறப்பட்டுள்ளது.
சங்கீதாவை விஜய் பலமுறை அடித்துள்ளார் - குண்டை போட்ட பிரபல பாடகி