தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி கிராமத்தின் சின்ன ஏரியில், கோழிப் பண்ணைகளில் இருந்து நோய்வாய்ப்பட்டு இறந்த பிராய்லர் கோழிகள் கொட்டப்படுகின்றன. இதனால் ஏரி முழுவதும் மாசடைந்து, கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த அவல நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.